திருக்குறள்

1298.

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

திருக்குறள் 1298

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பொருள்:

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

மு.வரததாசனார் உரை:

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.